search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜிம்பாப்வே அதிபர் தேர்தல்"

    முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபேவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து நடந்த ஜிம்பாப்வே தேர்தலில் ஆளுங்கட்சியான ஜானு-பி.எப். கட்சி வெற்றி பெற்று உள்ளது. #ZimbabweElection #ZimbabwePresidentialElection
    ஹராரே :

    ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் 37 ஆண்டு காலம் கொடி கட்டிப்பறந்த அதிபர் ராபர்ட் முகாபேவுக்கு எதிராக கடந்த ஆண்டு அங்கு புரட்சி வெடித்தது. 

    இதனால், முகாபேவின் பதவி பறிக்கப்படுகிற நிலை உருவானது. இதையடுத்து, தாமாக முன்வந்து சென்ற நவம்பர் மாத இறுதியில் அவர் பதவி விலகினார்.

    முகாபே பதவி விலகலை தொடர்ந்து எமர்சன் நங்காக்வா என்பவர் அதிபர் ஆனார். அந்நாட்டில் மொத்தம் உள்ள இடங்கள் 270 என்றாலும் 210 இடங்களுக்குத்தான் நேரடி தேர்தல் நடத்தப்படும். மீதி இருக்கும் 60 இடங்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஜிம்பாப்வேயில் முதன்முறையாக கடந்த 30-ந் பொதுத்தேர்தல் நடைபெற்றது.


    இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு நடைபெற்ற வன்முறையினால் 24 மணி நேர தாமதத்திற்கு பிறகு பலத்த பாதுகாப்புகளுடன் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. 

    இதில், அதிபர் எமர்சன் நங்காக்வாவின் ஆளும் ஜானு-பி.எப். கட்சி வெற்றி பெற்று உள்ளது. இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளில் 145 இடங்களில் அந்த கட்சி வெற்றி பெற்றுள்ளது. 

    இதனால்,  ஜானு-பி.எப். கட்சி மூன்றில் இரு பங்கு மெஜாரிட்டியை பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்குகிறது. ஒதனால் அந்நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தையும் திருத்தும் வல்லமை, ஜானு-பி.எப். கட்சிக்கு வாய்த்துள்ளது.

    இன்னும் முடிவு அறிவிக்கப்படாமல் 3 இடங்கள் உள்ளது. நெல்சன் சாமிசா தலைமையிலான எதிர்க்கட்சியான எம்.டி.சி, 60 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது. என்பிஎப் கட்சி ஒரு இடத்திலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். 

    ஆளுங்கட்சி கிராமப்புறங்களிலும், எதிர்க்கட்சி நகர்ப்புறங்களிலும் வெற்றி வாகை சூடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #ZimbabweElection #ZimbabwePresidentialElection
    ஜிம்பாப்வே அதிபர் தேர்தல் முடிவை அறிவிப்பதில் தேர்தல் கமி‌ஷனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. #ZimbabweElection #ZimbabwePresidentialElection

    ஹராரே:

    ஜிம்பாப்வேயில் 40 ஆண்டுகளாக தொடர்ந்து அதிபராக இருந்த ராபர்ட் முகாபே பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக எம்மர்சன் நங்காக்வா (72) புதிய அதிபரானார்.

    அதைத் தொடர்ந்து ஜிம்பாப்வேயில் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டு சமீபத்தில் ஓட்டுப்பதிவு நடந்தது.

    அதில் அதிபர் நங்காக்வா ‌ஷனு-பிஎப் கட்சி சார்பிலும், நெல்சன் சமீசா எதிர்க்கட்சிகளின் எம்.டி.சி. கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிட்டனர்.

    மேலும் 21 பேர் களத்தில் உள்ளனர். இருந்தாலும் நங்காக்வா- சமீசா ஆகிய 2 பேர் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

    ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆனால் முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர்கள் பெருமளவில் வெற்றி பெற்றதாக அதிபர் நங்காக்வா தெரிவித்தார்.


    அதை எதிர்க்கட்சியினர் ஏற்கவில்லை. வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்து விட்டதாக குற்றம் சாட்டினர். மேலும் எதிர்க் கட்சி வேட்பாளர் நெல்சன் சமிசா வெற்றி பெற்றதாக அறிவித்தனர். இதனால் முடிவை அறிவிப்பதில் தேர்தல் கமி‌ஷனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    எதிர்க்கட்சியினர் தலைநகர் ஹராரே உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆடிப் பாடியும், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெற்றி விழாவை கொண்டாடி வருகின்றனர்.

    அதனால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே ஜிம்பாப்வே முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #ZimbabweElection #ZimbabwePresidentialElection

    ஜிம்பாப்வே அதிபர் பதவிக்கு நாளை நடைபெறும் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்கப் போவதாக முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே தெரிவித்துள்ளார். #Mugabe #election
    ஹராரே:

    ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ராபர்ட் முகாபே (93) 1980-ம் ஆண்டு முதல் அதிபராக பதவி வகித்து வந்தார். அதிகாரத்தை தனது வசம் கொண்டு வர முயற்சிப்பதாக கூறி அந்நாட்டு துணை அதிபர் எம்மர்சன் நாங்காக்வா-வை முகாபே பதவி நீக்கம் செய்தார்.

    இதனால், ஆளும் ஷானு - பி.எப். கட்சியில் பிளவு ஏற்பட்டது. ராணுவ தலைமை தளபதி ஜெனரல் சிவெங்கா, நீக்கப்பட்ட துணை அதிபர் நாங்காக்வாவுக்கு ஆதரவாக நின்றார். இதனால், அந்நாட்டு அரசியலில் குழப்பநிலை ஏற்பட்டது.

    இதனையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி தலைநகர் ஹரரேவை ராணுவ பீரங்கிகள் சுற்றி வளைத்தன. அதிகளவிலான ராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன் தலைநகரை சுற்றி குவிக்கப்பட்டனர். ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அதிபர் முகாபே மற்றும் அவரது குடும்பத்தினர் ராணுவத்தின் கண்காணிப்பில் சிறை வைக்கப்பட்டனர். 

    ஜனநாயக ஆட்சியை குழிதோண்டி புதைத்துவிட்டு துப்பாக்கி முனையில் ஆட்சி நடத்த ராணுவம் முயற்சிப்பதாக முகாபே குற்றம் சாட்டினார்.

    இதற்கிடையே, அதிபர் முகாபேவை பதவி நீக்கம் செய்து, நாடு கடத்துவது குறித்து மாகாண ஆளுநர்கள் மற்றும் ஆளும்கட்சியின் அவசர கூட்டம் ஹராரே நகரில் நடைபெற்றது.

    முகாபேவை ஆட்சியை விட்டு நீக்க வேண்டும் என கடந்த ஒன்றரை ஆண்டாக பிரசார இயக்கம் நடத்தி வந்த ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் கிறிஸ் முட்ஸ்வாங்வா இந்த கூட்டத்தில் பங்கேற்றார். 

    ராபர்ட் முகாபேவை ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கியும் கட்சியின் புதிய தலைவராக முன்னாள் துணை அதிபர் நியமித்தும் இன்றைய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளும்கட்சியின் புதிய தலைவராக முகாபேவால் முன்னர் பதவி நீக்கம் செய்யப்பட்ட துணை அதிபர் எம்மர்சன் நாங்காக்வா நியமிக்கப்பட்டார். இதைதொடர்ந்து அவர் அதிபராகவும் பதவியேற்றார்.

    ஜிம்பாப்வே நாட்டின் அதிபர் பதவிக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில்  ராபர்ட் முகாபே போட்டியிடவில்லை. தற்போதைய அதிபர் எம்மர்சன் நாங்காக்வா(75) மற்றும் பிரபல வழக்கறிஞரும், கிறிஸ்தவ மதபோதகருமான நெல்சன் சாமிசா(40) இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவருக்குமே போதிய வாக்குகள் கிடைக்காமல் வரும் செப்டம்பர் 8-ம் தேதி இரண்டாம் சுற்று தேர்தல் நடைபெறலாம் என ஜிம்பாப்வே ஊடகங்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன.

    இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பின்னர் தலைநகர் ஹராரேவில் உள்ள தனது இல்லத்தில் ராபர்ட் முகாபே பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களுக்கு (எம்மர்சன்) நாளை நான் வாக்களிக்க மாட்டேன். எதிர்க்கட்சி வேட்பாளராக போட்டியிடும் நெல்சன் சாமிசாவுக்குதான் வாக்களிக்கப் போகிறேன் என்று முகாபே பகிரங்கமாக அறிவித்துள்ளார். எனது இந்த முடிவு ராணுவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து மீண்டும் மக்களாட்சி மலர வழி வகுக்கும் என நம்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  #Mugabe #election
    ×